விஜயின் நடனம் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஹிருத்திக் பதிலளித்துள்ளார்
விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல மால் ஒன்றில் ரசிகர்களை சந்தித்த ஹிருத்திக் ரோஷன் ரசிகர்களின் வேண்டுதலுக்காக நடனமாடி உற்சாகப்படுத்தினார். அப்போது விஜயின் நடனம் குறித்து கூறுமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஹிருத்திக் “விஜய் அவர்கள் நடனத்திற்காக தனியாக டயட் இருக்கிறார் என நான் நினைக்கிறேன். நடனத்தின் போது அவரிடம் இருக்கும் எனர்ஜி என்னை வியப்படையச் செய்கிறது. நடனத்திற்கு முன்பு அவர் உண்ணும் உணவுகள் பற்றிய தகவலை கேட்டு தெரிந்து கொள்ள எண்ணுகிறேன்” எனக் கூறினார்.