தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி நாயர். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முதலில் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனது தொடர்பாக வீட்டில் பணிபுரிந்த நபர் மீது பார்வதி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சில ஊடகங்கள் பார்வதி நாயர் இன் புகழுக்கும் நற்பெயருக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளன. அதனால் அவதூறு பரப்பினால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.