Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை எச்சரிக்கை…! 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே பாதுகாப்பா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணையில் நீர்மட்டம் கடந்த அக்டோபர் 22ம் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் பிறகு படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. இந்த நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தத.

இதன் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 5399 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நீர்வரத்து மேலும் அதிகமானால் ஆற்றின் வழியாக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |