Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: இவர்களுக்கு 15% ஊதிய உயர்வு…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட (சமக்ரசிக்ஷா) தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த ஊதிய உயர்வானது  நவம்பர் 1-ந் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்படும். புரோக்கர்மர், சிவில் இன்ஜினியர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம் ஐ எஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ் எம் சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் என்று அனைவருக்கும்  15% ஊதிய உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஆலோசகர்கள், உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் இருப்போருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |