Categories
மாநில செய்திகள்

சென்னை- பெங்களூருவந்தே பாரத் ரயிலின்…. இயங்கும் நேரம், கட்டண விவரம்…. மொத்த விவரம் இதோ…!!!!

வடமாநிலங்களில் வந்தே பாரத் என்று விரைவு ரயில் ஏற்கனவே நான்கு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்  பெங்களூரு-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னை – பெங்களூரு – மைசூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.இதில் அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உள்ளது 16 பெட்டிகள் உள்ளன. இதில் 1128 பேர் அமர்ந்து செல்ல முடியும்

இதன் கட்டண விவரம் மற்றும் பயண நேரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து காலை 5.50-க்கு புறப்படும் இந்த ரயில் 10.35-க்கு பெங்களூரு, மதியம் 12.30-க்கு மைசூரு சென்றடையும். சென்னை – மைசூருக்கு Chair car ~1200, Executive car 2295, பெங்களூருவுக்கு Chair car 3995, Executive car 1885, காட்பாடிக்கு Chair car 495, Executive car 950 கட்டணமாகும்.

 

Categories

Tech |