தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது.
உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று நடிகை சமந்தா கண்ணீருடன் வேதனை தெரிவித்தார். நடிகை சமந்தா கடும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போதும் விடா முயற்சியுடன் போராடி வருகிறார். அவர் ஒரு கையில் வென்ஃப்லான் என்ற ட்ரிப்ஸ் ஏற்றும் ஊசியுடன் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். கஷ்டமான காலங்களிலும் உறுதுணையாக இருந்ததாக ஜிம் பயிற்சியாளர் ஜுனைத் ஷேக்கிற்கு சமந்தா நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களின் கண்களில் நீரை வரவைக்கிறது.