Categories
தேசிய செய்திகள்

இனி ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக சுலபம்….. SBI வங்கி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் தற்போது அனைத்து வசதிகளும் டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காக தற்போது ஒரு புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ‌ அதன்படி குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆயுள் காப்பீடு சான்றிதழை வீடியோ மூலமாக சமர்ப்பித்து கொள்ளலாம். இந்த சேவையை எஸ்பிஐ பென்ஷன் சேவா என்ற செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வசதியை அனைத்து பொது ஓய்வூதியதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ‌ இந்நிலையில் வீடியோ மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டையுடன் ஓய்வூதிய கணக்குகளை இணைத்திருப்பதோடு, பான் கார்டு அட்டையும் வைத்திருக்க வேண்டும். இதனையடுத்து வெப் கேமரா, ஹெட்போனுடன் கூடிய ஸ்மார்ட் போன், லேப்லட், லேப்டாப் அல்லது கணினி மற்றும் சரியான இணைய சேவையும் இருக்க வேண்டும்.

ஏனெனில் வங்கியிலிருந்து அதிகாரி பேசும்போது இணையதள தேவைகள் ஒழுங்கான முறையில் இருக்க வேண்டும். கடந்த வருடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்படுவதோடு வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த வசதி காகிதம் இல்லாத முறையாகவும், இலவசமாகவும் வழங்கப்படும் என்றும் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |