கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மண்ணூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்ணூர் பெருமாள் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் ரேஷன் அரிசி இருந்தது.
இதனையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை அதிக விலைக்கு கேரளாவில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்ததோடு, அவர் பதுக்கி வைத்திருந்த மூன்று டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.