கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறு நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதி மீடியா ட்ரியை வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 4 மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது, பொதுமக்களை கவரும் வகையில் எல்.இ.டி டிஸ்ப்ளே, அலங்கார விளக்குகளுடன் மீடியா ட்ரீ அமைக்கப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றி வாகனங்கள் செல்ல ரவுண்டானா அமைக்கப்பட உள்ளதால் மரங்களை பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.