jio மட்டும்தான் நம்நாட்டில் ஸ்டேண்ட் அலோன் 5G ஆதரவுடன் வரக்கூடிய ஒரே நெட்வொர்க்காகும். எனவே இதன் சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். jio 5G ஸ்டேண்ட்அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும் பட்சத்தில், பிற நிறுவனங்களானது இந்த நெட்வொர்க்கை ஆதரிப்பதில்லை. ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை தயாரிப்பதற்கான செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் இதில் அதிகமான தொகையை முதலீடு செய்து, ஆரம்பத்திலிருந்தே அதை தயாரித்தது.
மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்குக்கு பதில் நான் ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை பயன்படுத்தியது. இதனால் ஜியோவின் 5G சேவை மட்டும்தான் உண்மையுள்ள 5G சேவையாக கருதப்படுகிறது. இதில் ஸ்டேண்ட் அலோன் என்பது முற்றிலும் ஒரு புது தளமாகும். அதன் காரணமாக 5G சேவையானது சீராக இயங்கும். இந்த நெட்வொர்க்கைத் தயாரிப்பதற்கு 4G இயங்குதளம் பயன்படுத்தப்படவில்லை. இது அதிவேக இணையத்தை வழங்குவதோடு, இவற்றில் போன் அழைப்புகளின்(கால்) தரமும் சிறப்பாக இருக்கும்.