Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம் செய்த எல்ஐசி முகவர்கள்…. பலக்கோரிக்கைகள் முன்வைப்பு…!!!!

பல கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கூட்டுக்குழு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் இளையப்பன் தலைமை தாங்க துணைத்தலைவர், இணை செயலாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இதில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், முகவர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது மற்றும் முகவர்களுக்கு பணிக்கொடை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும், முகவர்களுக்கான கமிஷன் தொகை குறைக்க கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளதாவது, மத்திய அரசு தலையிட்டு 13.5 லட்சம் முகவர்களையும் 37 கோடி பாலிசிதாரர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். நேற்று சேலத்தில் பரவலாக மழை பெய்த நிலையிலும் மழையை பொருட்படுத்தாமல் குடைகளுடன் எல்ஐசி முகவர்கள் கோட்டை மைதானத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

 

Categories

Tech |