அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. அதேசமயத்தில் இந்த ஆவணத்தை வைத்து சில மோசடிகளும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெறுகிறது. சமூக விரோதிகளால் திருடப்படும் ஆதார் உங்களை மிகப் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். இதனால் எங்கு ஆதார் கொடுக்கிறீர்கள், எத்தகைய ஆதாரை கொடுக்கிறீர்கள் என்பது முக்கியமாகும்.
எடுத்துக்காட்டாக ஆதாரில் எண் அனைத்தும் தெரியக்கூடிய ஆதார் கார்டை கொடுக்காமல், கடைசி 4 இலக்க எண்கள் மட்டுமே தெரியும் ஆதாரை ஆவணமாக கொடுப்பது உங்களுக்கு நல்லது. இதன் வாயிலாக உங்களின் தனிப்பட்ட ஆதார் ஆவண ரகசியங்கள் காக்கப்படும். எனினும் அந்த ஆதாரை கொடுக்காமல் அனைத்து ஆதார் எண்ணும் தெரியக்கூடிய ஆதார் கார்டை ஆவணமாக கொடுப்பது நல்லதல்ல. மத்திய அரசும் இதனை தான் வலியுறுத்துகிறது.
பொதுயிடங்களில் ஆதார் கார்டை (அ) அதன் ஜெராக்ஸை கொடுப்பதில் மிக கவனமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அந்த ஜெராக்ஸை கொடுப்பதன் மூலம், உங்களுக்கு தெரியாமலேயே உங்களது ஆவணங்கள் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆபத்து இருக்கிறது. அத்துடன் கம்ப்யூட்டர் சென்டர்கள் ஆகிய இடங்களில் ஆதார்கார்டை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்வது நல்லதல்ல.