தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கல்வி மற்றும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட அரசு பணியிடங்களில் EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும் 10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார் .
இதற்கு முன்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10%இடஒதுக்கீட்டுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு தமிழ்நாடு காங்., விசிக. மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப் படாது என்பது உறுதியாகியுள்ளது.