உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் Shedule வசதியானது ப்ரொபஷனல் அக்கவுண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின் படிப்படியாக மற்றவர்களுக்கு நீட்டிக்கப்படும். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஏற்கனவே மெட்டா, டிக் டாக், யூடியூப் போன்றவைகளில் பதிவுகளை தானாகவே பதிவுகளை Shedule செய்யும் வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து பதிவுகளை Shedule செய்யும் வசதி ப்ரொபஷனல் அக்கவுண்டுகள் பயன்படுத்துபவர்கள் மற்றும் பிசினஸ் அக்கவுண்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், 75 நாட்களுக்கு முன்பாகவே தங்களுடைய போஸ்ட்களை Shedule போட்டுக் கொள்ளலாம்.
மேலும் Shedule போடுவதற்கு பதிவுகளை உருவாக்கிய பிறகு, advanced setting option இல் உள்ள schedule this post என்ற ஆப்ஷனை கிளிக் செய்து எந்த தேதி மற்றும் நேரத்தில் போஸ்ட் ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொண்டால், நீங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்களுடைய பதிவு இன்ஸ்டாவில் வரும். இந்த புதிய வசதியால் பயனர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறாரார்கள்.