பிரிட்டனில் நாடாளுமன்ற பெண் எம்.பி ஒருவர், சில ஆண் எம்.பிக்கள் பற்றி அதிர வைக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சார்லட் நிக்கோல்ஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது, அப்படிப்பட்ட நபர்களோடு தனியாக இருக்காதீர்கள் என்று என்னை சில எச்சரித்தனர் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வது அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்று என்னிடம் கூறினார்கள்.
அவர்களிடம் தெரியாமல் கூட எதையும் வாங்கி குடிக்காதீர்கள், லிப்டில் பயணம் செய்யும்போதும் அவர்களோடு எப்போதும் செல்லாதீர்கள், உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அவர்களை தவிர்த்து விடுங்கள் என்று என்னிடம் சிலர் தெரிவித்ததாக அவர் கூறியிருக்கிறார்.
அந்த பட்டியலில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்காத அவர், அதில் இருவர் அமைச்சரவையில் மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அவர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். எனினும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் தொடர்ந்து பணியை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். தண்டனையிலிருந்து தப்பும் கலாச்சாரம் தான் தற்போது இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.