Categories
அரசியல் மாநில செய்திகள்

நிரபராதிகள் அல்ல, குற்றவாளிகள்….பாசாங்கு காட்டும் காங்கிரஸ்…. அண்ணாமலை குற்றச்சாட்டு…!!!

ராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் என அனைவரையும் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் , விடுதலை செய்யப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரும் நிரபராதிகள் என்பதற்காக விடுதலை செய்யப்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார். இதுபற்றி அவர், உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்புகளை வழங்கியதும், காங்., காட்டும் பாசாங்குத்தனம் திகைக்க வைக்கிறது. காங்.,க்கு தேசிய ஒருமைப்பாட்டை விட, மாநிலத்தில் தேர்தல் வெற்றிகள் முக்கியமாகிவிட்டது என்று சாடியுள்ளார்.

Categories

Tech |