Categories
சினிமா தமிழ் சினிமா

ரச்சிதாவிடம் எல்லை மீறும் ராபர்ட் மாஸ்டர்…. கொந்தளித்த முன்னாள் கணவர்…. வைரலாகும் அதிரடி பதிவு…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் பரபரப்பாக நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில், சக போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அதன் பிறகு அசல் கோலார் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டது பார்வையாளர் களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவரை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதேபோன்று ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் நடந்து கொள்ளும் விதம் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் கட்டாயப்படுத்தி முத்தம் கேட்டார்.

இதனால் தன்னுடைய நிலைமையை ரச்சிதா கூறினார். இருப்பினும் மாஸ்டர் விடாமல் ரச்சிதாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். ரச்சிதாவின் பதிலால் ரசிகர்கள் பலரும் we stand for rakshita என்ற ஹேஷ்டேக்கை வைரல் ஆக்கி வருகிறார்கள். இந்நிலையில் தினேஷ் தன்னுடைய முன்னாள் மனைவி ரச்சிதாவுக்கு ஆதரவு கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பெண் எல்லோரிடமும் நட்பாகவும், அன்பாகவும் பழகினால் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லி விடுவாள் என்று அர்த்தம் கிடையாது. சமுதாயத்தில் எல்லோரும் அமைதியான முறையில் வாழ்வதற்கு சில முட்கள் போன்று இருக்கும் மனிதர்களை தூக்கி எறிய தான் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் தினேஷின் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |