கயத்தாறு அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே இருக்கும் செட்டிகுறிச்சி தெற்கு கோனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவரின் மகள் உமா மகேஸ்வரி. இவர் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பரமசிவம் என்பவருக்கும் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
பரமசிவம் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக வேலை செய்து வருகின்றார். சென்ற நான்கு வருடங்களாக உமா மகேஸ்வரி உடல் நலக்குறைவு காரணமாக தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உமா மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.