தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தற்போது பருவமழை காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலை முடிவு பெறாமல் பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாங்காட்டில் இதே போல தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு தொடர் விபத்தால் மிகவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், இது குறித்த இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ”நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். முழு நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்”. என பதிவிட்டுள்ளார்.