இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராதாக்ருஷ்ணா செயலில் வழங்கப்படும் கிரீன் டிக் வசதி முற்றிலும் இலவசம் என்று தெரிவித்துள்ளார். அதோடு டுவிட்டருக்கு மாற்றாக நாங்கள் உலக அளவில் இருக்க விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகு ஆதார் அட்டையை பயன்படுத்தி கிரீன் டிக் பெற்ற பயனாளர்களுக்கு செயலியில் பதிவுகளை திருத்தும் திறன், மஞ்சள் நிற அடையாளத்தை பாதுகாத்தல் மற்றும் சுயவிவரங்களை சரிபார்த்தல் போன்ற பல்வேறு அம்சங்களையும் வழங்குகிறது.
அதன் பிறகு எங்களுடைய 2.5 வருட காலத்தில் 7500 பிரபலங்கள் எங்கள் செயலியில் இணைந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் டுவிட்டர் நிறுவனம் ஆங்கிலத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கி வரும் நிலையில், இந்தியாவை தாயகமாக கொண்டு செயல்படும் கூ நிறுவனமும் கூடிய விரைவில் உலக அளவில் பிரபலமாகும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.