நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் நடிகை கௌதமி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் கௌதமி. இதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்திலும் நடித்து பல வெற்றி திரைப்படங்களில் கொடுத்திருக்கின்றார்.
இவர் கடைசியாக கமலஹாசன் உடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு பாஜகவில் இணைந்து தேர்தலில் ஈடுபட்டார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது பாலிவுட்டில் உருவாகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றார். கௌதமி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து படப்பிடிப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/CkuSqPgPQVm/?utm_source=ig_embed&ig_rid=a6d2ce4a-a9bd-4aec-b665-c69651a85dfc