ஸ்பை கேமராக்கள் மூலம் ஒருவரது அந்தரங்க விஷயங்களானது பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அதனை கொண்டு மிரட்டி பணம்பறிக்கும் வேலைகளில் மோசடி கும்பல் ஈடுபடுகிறது. இதுபோன்ற சிக்கலை நீங்கள் சந்திக்காமல் இருப்பதற்கு, உங்களது கையிலுள்ள ஸ்மார்ட் போனைக் கொண்டே ஸ்பை கேமராவை கண்டுபிடித்து விடலாம்
ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா(ஆண்ட்ராய்டு)
அறையில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஸ்பைகேம் (அ) ஸ்பை மைக்கை கண்டுபிடிக்க உதவும் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா செயலியை எளிமையாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பை டிடெக்டர் ஆப் எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் கதிர்வீச்சின் தீவிரத்தை (radiation intensity) கண்டறிவதற்கு மேக்னட்டிக் சென்சாரை (magnetic sensor) பயன்படுத்தி கேமராவை கண்டுபிடிக்கிறது.
ஹிடன் கேமரா டிடெக்டர்
ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்யவும். இதையடுத்து சந்தேகத்திற்கு உரிய பொருளின் அருகில் ஸ்மார்ட் போனின் கேமராவை கொண்டு போகவேண்டும். அங்கே ஏதேனும் ஸ்பை கேமரா இருப்பின், இந்த ஆப் அதனை கண்டுபிடிக்கும். இந்த ஆப்-ல் ஸ்பீக்கர்கள், கேமராக்களின் மேக் னெட்டிக் செயல்பாடு ஆகியவை கண்டறியக்கூடிய மேக்னட்டோ மீட்டர் இருக்கிறது.
ஆண்ட்ராய்டில் மட்டுமே அணுககிடைக்கும் Hidden camera detector செயலி ஸ்பை கேமராவையும் கண்டறிவதற்கு உதவும். இவை ஒரு மேக்னெட்டோ மீட்டருடன் வருகிறது. இது உங்களது ஸ்மார்ட் போனிலுள்ள மேக்னெட்டிக் சென்சாரை பயன்படுத்தி ரகசிய கேமராவின் மேக்னெட்டிக் செயல்பாடுகளையும் கண்டறியும்.
ஹிடன் கேமரா டிடெக்டர் ப்ரோ
ஹிடன் கேமரா டிடெக்டர் ப்ரோ ஆப் வாயிலாக ஒரு அறையின் சுற்றுப்புறங்களிலுள்ள உளவு கேமராக்கள் (அ) மறைக்கப்பட்ட கேமராக்களை கண்டுபிடிக்கலாம். அத்துடன் இந்த ஆப் மறைத்து வைக்கப்பட்டுள்ள மைக்ரோபோனையும் கண்டறியும். அதுமட்டுமல்லாமல் இதனால் அகச் சிவப்பு கேமராவையும் கண்டறியமுடியும்.