Categories
உலக செய்திகள்

“பெல்ஜியத்தில் பயங்கரம்!”…. இரவில் கத்திக்குத்து தாக்குதல்… காவல்துறை அதிகாரி பலி…!!!

பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் துப்பாக்கியால் அந்த நபரை சுட்டுவிட்டார். அதன்பிறகு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் கிடந்த இரண்டு அதிகாரிகளையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதில், ஒருவர் சிகிச்சை பலனிக்காமல் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த நபர் “கடவுளே சிறந்தவன்” என்று அரபி மொழியில் கத்திகொண்டே தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது பயங்கரவாத தாக்குதல் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |