Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ராஜீவ் காந்தி கொலை வழக்கு : நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி..!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உட்பட 6 பேர் சிறையில் உள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் நளினி பரோல் விடுப்பில் வெளியே உள்ளார். இந்நிலையில் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனை கடந்த மே மாதம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Categories

Tech |