Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷார்…. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்க போகுது….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது‌ என்று அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற 18 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும். மேலும் கனமழையின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து செல்லும்போது பாதுகாப்பாக இருக்கும் படியும், மிகவும் கவனமாக இருக்கும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |