இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான முறையில் மேற்கொள்வதற்காக YONO என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இதேபோன்று மற்றொரு புதிய வசதியையும் தற்போது எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது mPassbook என்ற வசதியை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதை நீங்கள் வங்கிக்கு செல்ல முடியாத சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆன்லைன் செயலி மூலம் உங்களுடைய பேங்க் பாஸ் புக்கை செல்போனில் பார்த்துக் கொள்ளலாம். இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு YONO செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்ளே சென்ற பிறகு எனது கணக்குகள் என்பதற்கு கீழ் இருக்கும் mpassbook என்பதை கிளிக் செய்தால் சமீபத்திய விவரங்களை பார்த்துக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்வதால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் இந்த செயலி பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.