திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லமான்தடி பகுதியில் இளையராஜா(33) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்த இளையராஜா திருச்சி தில்லைநகர் 6-வது கிராஸ் பகுதியில் இயங்கி வரும் கன்சல்டன்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நவாஸ்(39) என்பவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு 85 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி இளையராஜா நவாஸிடம் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து நவாஸ் போலியான விசாவை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த இளையராஜா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.