8- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மதிஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய சிறுமியை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மதிஸ்ரீ தனது வீட்டில் இருந்த அதிக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மதிஸ்ரீயை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.