நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச். வினோத், போனி கபூர் மற்றும் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் துணிவு என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதன் பிறகு துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் ஆகியோர் தங்களுடைய டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் பாடல் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களை சந்தித்துள்ளார். அப்போது நடக்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி ரசிகருடன் அமர்ந்து அஜித் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.