இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் பலருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், மம்மூட்டி, சஞ்சய் தத், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா, மோகன்லால், பிரித்விராஜ், பார்த்திபன், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விக்ரம் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோல்டன் விசா வாங்கிய யுவன் சங்கர் ராஜாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.