Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாடா!…. ஒரு வழியா வந்துட்டு…. “புஷ்பா 2” படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி….. நீங்களே பாருங்க…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2-ம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

ஆனால் புஷ்பா தி ரூல் என்று  பெயர் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சில பல காரணங்களால் பல மாதங்களாக தள்ளி போனது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காங்க் நகரில் அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‌ பாங்காங்க் நகரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் 3 வார காலத்திற்கு சூட்டிங் எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். மேலும் இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் இருக்கிறார்கள்.

Categories

Tech |