தமிழில் புதுமுக நடிகர்கள் விசுவா மற்றும் கார்த்திகேயா நடித்துள்ள படம் என்னை மாற்றும் காதலே. இந்தப் படத்தை இயக்குனர் சல்பதி புல்வாலா இயக்கியுள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிதிகா சீனிவாஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எல்லா படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வளைச்சி போடுகிறார்கள் என்ற பேச்சு தான் தற்போது பரவலாக இருக்கிறது. ஆனால் அது தவறு.
எனக்கு தெரிந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். என்னிடம் பல பேர் உதயநிதி சாரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்கிறார்கள். ஏனெனில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பெயர் பேனரில் இருந்தாலே கண்டிப்பாக ஒரு கூட்டம் தியேட்டருக்கு வந்துவிடும். ஏனெனில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெயர் இருந்தாலே கண்டிப்பாக அந்த படம் நன்றாக தான் இருக்கும். மேலும் அந்த படம் நன்றாகவும் நல்லபடியாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஒரு கூட்டம் தியேட்டரில் காத்துக் கிடக்கிறார்கள் என்று கூறினார்.