ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை அடுத்த தாடே பல்லியில் வசிப்பவர் ஷாஷிகாந்த். இவர் ஐடி ஊழியர் ஆக பணியாற்றி வந்த நிலையில் கொரோனா காலத்தில் போது சோதனை அடிப்படையில் கருப்பு அரிசியை பயிரிட தொடங்கியுள்ளார். ரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை சாகுபடி செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு போகத்திலும் பாஸ்மதி அரிசி மற்றும் சர்க்கரை இல்லாத அரிசியை பயிரிடப்பட்டு அறுவடை செய்துள்ளார். தற்போதும் அவர் ஐடி வேலையை விடுத்து முழு நேரமாக இயற்கை விவசாயம் செய்து லாபம் ஈட்டி வருகிறார். இவர் எதிர்கால தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபட வைப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.