Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்ளீஸ்..! தயவு செய்து வெளிய போங்க….. கோலி, பாண்டியா இல்லன்னா…. விளாசும் ரசிகர்கள்..!!

இரண்டாவது அரையிறுதியில் கோலி, பாண்டியா அரைசதத்தால் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.. ரோஹித், ராகுலை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்..

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கிய கே.எல் ராகுல் இன்று நாயகனாக ஜொலிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிறிஸ் ஜோர்டன் வீசிய இரண்டாவது ஓவரில் கீப்பர் பட்லரிடம் கேச் கொடுத்து 5 ரன்னில் நடையை கட்டினார். இதையடுத்து விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவும் இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் பொறுமையாக ஆடிவந்தனர்.

பின் தட்டி ஆடிக்கொண்டிருந்த ரோகித் சர்மா ஜோர்டன் வீசிய 9 ஆவது ஓவரில் தூக்கியடிக்க முயன்று 28 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆனார், இதன் பின் சூரியகுமார் யாதவ் உடன் கோலி ஜோடி சேர்ந்த நிலையில், நன்கு தொடங்கிய சூர்யா 14 ரன்கள் எடுத்தபோது ஆடில் ரசித் வீசிய 12ஆவது ஓவரில் அவுட் ஆனார்.

இந்திய அணி 11.2 ஓவரில் 75 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. இதை எடுத்து விராட் கோலி – ஹர்திக் பாண்டியா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடி வந்த பாண்டியா கடைசியில் விஸ்வரூபம் எடுத்தார். ஜோர்டன் வீசிய 18 ஆவது ஓவரில்  ஹர்திக் பாண்டியா முதல் 2 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு ரன் ரேட்டை உயர்த்தினார். அந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இருப்பினும் அந்த ஓவரிலன் கடைசி பந்தில அரை சதம் அடித்திருந்த விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதையடுத்து ரிசப் பண்ட் உள்ளே வந்தார். சாம்கரன் வீசிய 19 ஆவது ஓவரில் ரிஷப் பண்ட் ஒரு பவுண்டரி அடிக்க, ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி அடித்து நொறுக்க அந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தது. அத்துடன் அரை சதமும் கடந்தார் பாண்டியா. ஜோர்டன் வீசிய கடைசி ஓவரில் பண்ட் 6 ரன்னில் ரன் அவுட் ஆனார். இருப்பினும் 4 மற்றும் 5ஆவது பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி அடித்த பாண்டியா கடைசி பந்தில் ஹிட் விக்கெட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து களமிறங்கி ஆடி வருகிறது.

கோலி அரைசதம் மற்றும் கடைசி கட்டத்தில் அதிரடியாக 33 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 63 ரன்கள் எடுத்ததால் தான் இந்தியா சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது. ரோஹித், ராகுல் சரியான தொடக்கத்தை கொடுக்கவில்லை, அரையிறுதில் இப்படி ஆமை வேகத்தில் விளையாடி அவுட் ஆனது பற்றி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.தயவு செய்து டி20யில் இருந்து ஓய்வு கொடுங்கள் குறைந்தபட்சம் தகுதியான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரோஹித், கேஎல் ராகுலை விளாசி வருகின்றனர்.

 

https://twitter.com/Ram_S_0209/status/1590649200903327745

https://twitter.com/SportyVishaI/status/1590625750738407424

https://twitter.com/SportyVishaI/status/1590630948915511297

https://twitter.com/AkshatOM10/status/1590624979930210304

Categories

Tech |