Categories
மாநில செய்திகள்

சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டி: பருவநிலை விருதை வென்ற தமிழக மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள வானவில் நகரில் வசித்துவரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரின் மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத் தலைமுறையினர் கூறும் புது தீர்வுகளை கண்டெடுக்க பருவநிலை விருது 2016ல் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடைய நடுவர் குழு சென்ற 2020ஆம் வருடம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா ஸ்டாக்ஹோமிலுள்ள சிட்டி ஹாலில் நடந்தது.

திருவண்ணாமலை எஸ்.கே.பி சர்வதேச பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் வினிஷா உமாசங்கர் உருவாக்கியுள்ள சூரிய ஒளியால் இயங்கும் இஸ்திரிவண்டி சுத்தமான காற்றுவிருது பிரிவில் சென்ற 2020ம் வருடத்திற்கான மாணவர் பருவ நிலை விருதை வென்றார்.  புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரியஒளியை பயன்படுத்துவது இந்த கண்டுபிடிப்பின் முக்கியமானதாகும். மரங்கள் வளர்ப்போம், மழை பெறுவோம், காற்று மாசுபடுவதை தடுப்போம், பருவநிலை மாற்றத்தை தடுப்போம் எனும் அடிப்படையில் மாணவி வினிஷா இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.

Categories

Tech |