செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் அப்பவே நான் விட்டுக் கொடுத்தேன் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இப்பவும் சொல்றேன், திமுக என்கின்ற தீய சக்தியை வருங்காலத்தில் வீழ்த்த வேண்டும் என்றால், அம்மாவின் தொண்டர்கள் அனைவரும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி… எங்கு இருந்தாலும் சரி… எந்த மெகா கூட்டணி அமைக்கிறவங்களா இருந்தாலும் சரி… மத்தவங்கள பாத்து கேவலமா பேசுறவங்களா இருந்தாலும் சரி…. கூட்டணி அமைத்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும். திமுகவிற்கு எதிரான கூட்டணி அமைப்பதற்கு நாங்கள் எப்பொழுதும் நேச கரம் நீட்டுவோம் என தெரிவித்தார்.