முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11,000-த்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து முகநூல் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவும் பணியாளர்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், முகநூல் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது குறித்து முகநூல் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் தெரிவித்ததாவது, மெட்டா நிறுவனத்தின் வரலாற்றிலேயே நாங்கள் மேற்கொண்ட மிக கடினமான மாற்றங்கள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறேன். எங்கள் நிறுவனத்தின் பலத்தை 13% குறைப்பதற்கும் 11 ஆயிரத்திற்கும் அதிகமான திறமை மிகுந்த ஊழியர்களை நீக்கவும் தீர்மானித்துள்ளேன்.
முதல் காலாண்டு வரை பணியாளர்களை சேர்ப்பதை நிறுத்துவதால் திறமை மிகுந்த நிறுவனமாக மாறும். மேலும், செலவினங்களை குறைப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். பணியிலிருந்து நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு 16 வாரங்கள் சம்பளம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.