நாளை ஏவ இருந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பூமி கண்காணிப்பு , இயற்கை வளங்களைக் கண்டறிதல் , காடு வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்டவை குறித்த ஆய்வை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட். இது நாளை மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. இஸ்ரோ அனுப்பிய 76 ராக்கெட்டுகளில் இதுதான் அதிகப்படியான உயரமாகும் , சுமார் 16 மாடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்ட்தாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
பேரிடர் மேலாண்மை குறித்து முக்கூட்டியே ஆய்வு நடத்தி புகைப்படம் எடுத்து அனுப்பும் வசதி கொண்ட இந்த ஜிஎஸ்எல்வி எப்- 10 ராக்கெட் ஏவுவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. அதற்கான அனுமதி சீட்டுகள் கூட வழங்கப்பட்ட நிலையில் இன்று திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவும் பணி ரத்து செய்யப்படுவதாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.
The launch of GISAT-1 onboard GSLV-F10, planned for March 05, 2020, is postponed due to technical reasons. Revised launch date will be informed in due course.
— ISRO (@isro) March 4, 2020