தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் பயிலும் 2000 மாணவர்களை உத்திரப்பிரதேசத்தின் காசிக்கு மத்திய அரசு இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்காக பாரதிய பாஷா சமிதி என்ற குழுவை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கிய நிலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள காசி நகருக்கும் தமிழ் சமூகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக உள்ள நெருங்கிய தொடர்பை மறு உருவம் செய்து அதனை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளுக்கு இந்த குழு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் பயிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அதிகமான மாணவ மாணவிகளை காசிக்கு அழைத்துச் செல்லும் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்வு வருகின்றன நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ரயில் மூலமாக இலவசமாக காசிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.