Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறிய ராபர்ட் மாஸ்டர்…. ரட்சிதாவிடம் முத்தம் கேட்டு அலப்பறை…. வைரல் வீடியோ…..!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் தொடர்ந்து பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு சில விஷயங்கள் தற்போது பார்வையாளர்களை முகம் சுளிக்கும் வகையில் மாறி உள்ளது.

கடந்த வாரம் கமல்ஹாசன் முன்பு ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்வது போல நடந்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஸ்வீட் டாஸ்க் மீண்டும் ரட்சிதாவிடம் முகம் சுளிக்கும் விதமாக அவர் நடந்து கொண்டு உள்ளார். நாகினி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் எனவும் இதனால் அண்ணனுக்கு முத்தம் கொடு என எல்லை மீறி மோசமான வகையில் ரச்சிதாவிடம் பேசி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ராபர்ட் மாஸ்டரை பலரும் கண்டித்து வருகிறார்கள்.

https://twitter.com/whyrajawhy/status/1589973809905676289

Categories

Tech |