Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. இன்று ஒரு நாள் மட்டும் இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |