திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி “பாலியல் வன்கொடுமை” செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் சமாதானபுரத்தில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகருக்கு உட்பட்ட சமாதானபுரத்தில் உள்ள மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் முனியாண்டி என்வரின் மகன் ஆவர். இவர் செண்டை மேளம் வாசிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
இவருக்கு 28 வயது ஆகிறது. முதலாவது திருமணம் ஆகி அந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் சக்திவேலுக்கு இரண்டாவது திருமணம் ஆகியிருக்கிறது. இரண்டாவது திருமணம் ஆன மனைவிக்கும் சக்திவேலுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மனைவியும் பிரிந்து சென்ற நிலையில் அதே பகுதியைத சேர்ந்த 14 வயதான 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் படி காவல்துறையினர் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு சக்திவேல் என்பவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் இந்த தகவல் தெரிய வந்தவுடன் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறி திருநெல்வேலி அரசுக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து இருக்கிறார்.
இதை தெரிந்து அங்கு சென்ற காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை செய்து அவரை கைது செய்தனர். தற்போது இவர் எப்போது நலம் பெறுகிறாரோ அப்போது காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என தெரிகின்றது.