காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.