எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் செலவை கட்டுப்படுத்த்தி, வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் தற்போது நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் பலர் பணியிலிருந்து நீக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் 90 சதவீதம் ட்விட்டர் நிறுவன பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இது பற்றி ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது, இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தில் 200 பேர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம் 180 க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 10க்கும் மேற்பட்ட சிலர் மட்டும் இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனம் எலான் மஸ்க்கின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் twitter எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.