Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் சாதிக்கை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் சாதிக்கிற்கு 4000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நிதியிலிருந்து 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |