Categories
தேசிய செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரி: 7 கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை அகற்றம்…. பரபரப்பு புகார்….!!!!

பீகாரில் ராம்நகர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தனியார் நர்சிங்மையத்தில் உரிய சம்மதம் இன்றி 7 கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருப்பதாக புகார் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி மேற்கு சாம்பரண் சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேந்திர குமார் சவுத்ரி கூறியதாவது, ராம்நகர் பஞ்சாயத்து பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையில் 7 கர்ப்பிணிகளின் கருப்பை அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 2 (அ) 3 பெண்களுக்கு சிசேரியன் வாயிலாக குழந்தை பிறந்துள்ளது.

ஆகவே அவர்களுக்கு இடையூறு இன்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மருத்துவமனையிலிருந்த மற்ற நோயாளிகளையும் வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றிவிட்டோம். அத்துடன் இது தொடர்பாக ராம்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Categories

Tech |