Categories
மாநில செய்திகள்

2023 பொங்கலுக்கு வேற ஐடியா…! மாற்றி யோசித்த C.M ஸ்டாலின்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!

2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக அரசு புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரிய பகவான், காளை,பசு மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2022 ஆம் வருடம் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் அதிக குளறுபடி நடந்ததாக எதிர்க் கட்சியினரும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் 2023 ஆம் வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவது பற்றி அதிகாரிகளுடன்  முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வருடம் பரிசு பொருட்கள் வழங்காமல் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்ற நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

Categories

Tech |