Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்!

சீனாவை உலுக்கி வரும் கொரோனோ வைரஸுக்கு அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம். டெல்லியில் நேர்மறையாக சோதிக்கப்பட்ட நபரின் தொடர்புத் தடத்தை மேற்கொண்டபோது, ஆக்ராவில் உள்ள அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 16 இத்தாலியர்கள் உட்பட 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை நடவடிக்கைகள் துரிதப்படுத்தபப்ட்டுள்ளன என கூறியுள்ளார்.

Categories

Tech |