Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப் பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் புறப்பட்டது. இந்நிலையில் இந்த சரக்கு ரயிலானது ராஜமுந்திரி அருகில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்வாறு சரக்கு ரயில் விபத்தை அடுத்து அந்த வழித்தடத்தில் போகக்கூடிய 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆகவே மீட்புப்பணிகள் நடைபெற்ற பிறகு ரெயில் போக்குவரத்து துவங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |