டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் ஜி.பி. முத்து தனது குடும்பமே அதிமுகவுக்கு ஆதரவானது என்றும் ஜெயலலிதா தான் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் எனவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்து அதிமுக ஐடி விங் அணியினர் கொண்டாடி வருகின்றனர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜி பி முத்துவை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது. தற்போது இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.